புலம்பெயர்ந்தவர்களில் இலங்கைக்கு இரண்டாவதாக பாரிய அந்நியச் செலாவணி இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளதன்படி இவ் வந்நியச் செலாவணியின் பெறுமதி 693.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
இலங்கை வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட அதிகூடிய பெறுமதியிலான அன்னியச் செலவணியாக பதிவு செய்யப்பட்டது 2020 டிசம்பர் 812.7 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். கொரோனா தொற்று காரணமாக 2020 டிசம்பர் காலப்பகுதியில் இலங்கையின் தொழிலாளர்கள் வேலையை விட்டு நாட்டுக்கு வருகை தந்தமையினால், ஒரு தடவை நிதி (Terminal benefits) பாரிய அளவில்
நாட்டிற்கு அதிக அளவில் பணம் அனுப்பப்பியமை இந்நிலைக்கு வழிவகுத்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி 2025 முதல் காலாண்டில் இலங்கைக்கு கிடைத்த மொத்த புலம்பெயர்ந்தவர்களின் அந்நிய செலாவணி வருமானத்தின் பெறுமதி 1,814.4 வரை அதிகரித்துள்ளதுடன், இது 2024 முதல் மூன்று மாதங்களில் அனுப்பப்பட்ட மொத்த டாலர்களின் பெறுமதி 1,536.1 மில்லியன் அது விகிதாசாரத்தில் 18.1% வீத வளர்ச்சியாகும்.