நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு
  • :

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.

2025 ஓகஸ்ட் 16ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2025 ஓகஸ்ட் 16ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும்.

வடமேல் மாகாணத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்கள் பொதுவாக சீரான வானிலை காணப்படும்.

மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீட்டர் வரையான வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.

 

Related Articles