உடுவிலில் நடைபெற்ற விசேட நடமாடும் சேவையில் 1526 பொதுமக்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனர்

உடுவிலில் நடைபெற்ற விசேட நடமாடும் சேவையில் 1526 பொதுமக்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனர்
  • :

கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் நேற்று (15.08.2025) உடுவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற விசேட நடமாடும் சேவையில் 1526 பொதுமக்கள் வருகை தந்து, 1903 சேவைகளைப் பெற்றுக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய விசேட நடமாடும் சேவையில் - கண் பரிசோதனையினை 568 பேரும், ஆட்பதிவுச் சேவையினை 390 பேரும், மருத்துவ பரிசோதனைச் சேவையினை 241 பேரும், பிறப்பு இறப்பு பதிவுச் சேவையினை 243 பேரும், மோட்டார் வாகன போக்குவரத்து சேவையினை 94 பேரும், மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவையினை 38 பேரும், ஓய்வூதிய சேவையினை 65 பேரும் உள்ளடங்களாக 1526 பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றி தமக்குரிய சேவைகளைப் பெற்றுக்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Related Articles