நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் தற்போது கையிருப்பில் உள்ள மேலதிக நெல் இருப்புகளை வெளிப்படையான டெண்டர் நடைமுறை மூலம் விற்பனை செய்ய அமைச்சரவை அனுமதி

நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் தற்போது கையிருப்பில் உள்ள மேலதிக நெல் இருப்புகளை வெளிப்படையான டெண்டர் நடைமுறை மூலம் விற்பனை செய்ய அமைச்சரவை அனுமதி
  • :
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் தற்போது கையிருப்பில் உள்ள மேலதிக நெல் இருப்புகளை வெளிப்படையான டெண்டர் நடைமுறை மூலம் விற்பனை செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

 நெல் சந்தைப்படுத்தல் சபையால் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள அண்ணளவாக 115,000 மெற்றிக்தொன் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதுடன், தொடர்ந்துவரும் பெரும்போகத்தில் விவசாயிகளின் நெல் கொள்வனவுக்குத் தேவையான களஞ்சிய வசதிகள் மற்றும் நிதி ஏற்பாடுகளைச் செய்வதற்கு, குறித்த நெல் இருப்பின் போதியளவு பாதுகாப்பு இருப்புத் தொகையை பேணிக்கொண்டு எஞ்சியவற்றை விற்பனை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, முறையான விலைமனுக்கோரல் முறைமையைக் கடைப்பிடித்து குறித்த நெல் இருப்புத் தொகையை விற்பனை செய்வதற்கு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

Related Articles