பகடிவதை உள்ளிட்ட எல்லா விதமான துன்புறுத்தல்களையும் தடுப்பதற்கு செயலாற்றுகை அணி நியமிக்கப்பட்டது

  • :

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் ஆலோசனையின்படி, பல்கலைக்கழக கட்டமைப்பிலும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களிலும் நிலவுகின்ற பகடிவதை,

துன்புறுத்தல்கள் மற்றும் எல்லா விதமான வன்முறைகளையும் தவிர்ப்பதற்காக தேசிய செயலாற்றுகை அணியொன்றை நியமிப்பதற்கு கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ அவர்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்தார். 2025.05.14 ஆம் திகதி இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கிணங்க செயலாளரினால் இவ்வாறு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

பல்கலைக்கழகம் மற்றும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களில் நிலவுகின்ற பகடிவதைகளை ஒழிப்பது நிகழ்கால அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். பகடிவதை மட்டுமன்றி, மாணவர்களால் மாணவர்களுக்கு, நிர்வாகத்தினராலும் மற்ற தரப்பினராலும் மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான துன்புறுத்தல்களையும், அதேபோல் விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்களையும் தடுப்பதே இந்த செயலாற்றுகை அணியின் முதன்மை நோக்கமாகும். பல்கலைக்கழகம் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் கல்விக்குத் தேவையான உயர் தரமான சுதந்திரமான சுற்றுச்சூழலை உருவாக்க எல்லா வகையான துன்புறுத்தல்களையும் வன்முறைகளையும் தடுப்பது அத்தியாவசியமாகும்.

இந்த செயலாற்றுகை அணி உறுப்பினர்களாக பின்வருவோர் நியமிக்கப்பட்டனர்.
பேராசிரியர் திரு. கே.எல். வசந்த - உப தலைவர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
பேராசிரியர் திருமதி. பிரபா மனுரத்ன - பணிப்பாளர், ஆண் பெண் சமத்துவம் மற்றும் நியாயத்திற்கான நிலையம், CGEE) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
பேராசிரியர் திருமதி. ஹேமமாலி குணதிலக்க - உறுப்பினர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
பேராசிரியர் திரு. விஜய ஜயதிலக்க - CGEE நிறுவனத்தின் முன்னாள் உறுப்பினர்
பேராசிரியர் திருமதி. சயுரி பெரேரா - உளச் சிகிச்சை கற்கைப் பிரிவு, மருத்துப் பீடம், பேராதனை பல்கலைக்கழகம்

திருமதி. ஷானிகா மலல்கொட - தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை
திருமதி. அப்ஷரா கல்தேரா - மேலதிகச் செயலாளர், கல்வி அமைச்சின் உயர் கல்விப் பிரிவு
திரு. குணதாக சமரசேகர - மேலதிக செயலாளர், கல்வி அமைச்சின் தொழில் கல்விப் பிரிவு.
கலாநிதி திரு. சின்தக்க பெரேரா - பணிப்பாளர், பட்டங்கல பல்கலைக்கழக் கல்லூரி
திரு. ஏ.ஜீ.ஏ.ஜாலித குமார - பணிப்பாளர், இலங்கை உயர் தொழில்நுட்ப நிலையம் - கொழும்பு 15
திரு. ஜே.பீ. விஜயதிலக்க ஜயசிங்க - கொழும்பு பல்கலைக்கழகம், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் பிரதிநிதி
டபிள்யூ.ஏ.ஏ. வேரஹெர - பேராதனை பல்கலைக்கழகம், பல்கலைக்கழக ஒழுக்கப்பாதுகாப்புப் பிரிவின் பிரதிநிதி

திரு. கவிந்து பிம்சர - செயலாளர், மாணவர் சங்கம், கொழும்பு பல்கலைக்கழகம், சட்டப் பீட மாணவர்.
செல்வி. சஜினி வத்சலா - செயலாளர், மாணவர் சங்கம், மொறட்டுவ பல்கலைக்கழகம், சட்டப் பீட மாணவர்.
பொலிஸ்மா அதிபர் பெயர் குறிப்பிடப்பட்ட உறுப்பினர்கள்
சட்டத்துறை அதிபதி பெயர் குறிப்பிட்ட உறுப்பினர்கள்

இந்நாட்டின் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் வன்முறைகளற்ற சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரத்தை உருவாக்குதல், அதற்கான கொள்கை முன்மொழிவு, அதற்குத் தேவையான சட்டவிதிகளை புதுப்பிப்பதற்கான பரிந்துரைகளை தயாரித்தல், துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகளை தடுத்து நிறுத்துவதற்காக கட்டமைப்பை உருவாக்குதல், சம்பவங்களை அறிக்கையிடுதற்கான, அதுகுறித்து உடனடி பதில்களை வழங்குவதற்கான நடைமுறைகளை தயாரித்தல், உயர்ந்த நோக்கத்திற்காக அரசு, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியாட்களை இணைத்துக்கொள்ளல், பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் கௌரவத்தை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட உளவியல் பாதிப்பை கருத்திற்கொண்டு யதார்த்த நிலைமைக்கு கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்ற விடயங்களை செயலாற்றுகை அணியின் ஊடாக மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

சம்பவங்களுக்கு பதிலளிப்பதற்காக மட்டுமல்லாமல், துன்புறுத்தல் மற்றும் வன்முறைகள் அற்ற சூழலை உயர் கல்வி நிறுவனங்களில் உருவாக்குவதற்கும் தேவையான விளக்கங்கள் மற்றும் செயல் திட்டங்களை தேசிய வேலைத்திட்டத்தின்படி அமைப்பதற்கான அம்சங்களை கருத்தில் கொண்டு, மேற்கண்ட நோக்கங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில், இந்த செயலாற்றுகை அணியின் கீழ் பல்கலைக்கழகங்களிலும் மற்ற உயர் கல்வி நிறுவனங்களிலும் ஓர் அலகை உருவாக்குவதற்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.

Related Articles