இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை நிலையத்தினால், 2026 மே 13ஆம் திகதி பிற்பகல் 03.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் 2026 மே 13ஆம் திகதி முற்பகல் 06.30 மணியில் வெளியிடப்பட்டது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும்:
தயவுசெய்து தயாராக இருக்கவும்!
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 200 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், பலத்த மழைவீழ்ச்சி, பலத்த காற்று மற்றும் கடும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.




