தேயிலை கைத்தொழில் மற்றும் அதனுடன் இணைந்த சேவைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காக புதிய ஓய்வூதிய சம்பள முறை

தேயிலை கைத்தொழில் மற்றும் அதனுடன் இணைந்த சேவைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காக புதிய ஓய்வூதிய சம்பள முறை
  • :

கமநல சேவைகள் மற்றும் கமநலக் காப்புறுதி சபை மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு இணைந்து தேயிலை கைத்தொழிலுடன் இணைந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காக புதிய ஓய்வூதிய சம்பள யோசனை முறையை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் போது தேயிலை தோட்டத்துடன் இணைந்த மற்றும் தேயிலைத் தொழிற்சாலைகளுடன் இணைந்த சேவைகளின் நபர்களுக்கு இந்த ஓய்வூதிய சம்பளம் தொடர்பு படக்கூடிதாக இருக்கும்.

இதன்போது பங்களிப்பாளரின் நிதி இயலுமைக்கு அமைவாக இந்த ஓய்வூதிய சம்பள யோசனை முறையில் சேர்வதற்கான வாய்ப்பு உள்ளது.

இந்த ஓய்வூதிய சம்பள திட்டத்தின் கீழ் 18 வயதில் பங்களிப்பு செய்யும் நபர் ஒருவருக்கு ஒரு காலாண்டுக்கு 600/- ரூபாய்க்கு செலுத்துவதனால் அவருக்கு 60 வயது பூரணமாகும் போது 5000/-ஓய்வூதிய சம்பளமாக பெற்றுக்கொள்ள முடியும். இந்த முறையில் செலுத்தப்படும் தவணைக் கட்டணத்தின் அடிப்படையில் 15,000/-, 20,000/-, 25,000/- போன்ற மாதாந்த ஓய்வூதிய சம்பளத்தைப் பெற்றுக் கொள்வதுடன் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமது விருப்பத்திற்கு இணங்க அதனை அதிகரிக்க கூடிய ஓய்வூதிய சம்பளம் ஒன்றைத் தயாரிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஓய்வூதிய சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்கு முன்னர் பங்களிப்பாளர் அவசர அனர்த்தத்திற்கு முகம் கொடுத்தால், முழுமையான அல்லது பகுதியளவிலான பாதிப்புகள் ஏற்பட்டால்/ மரணம் அடைந்தால் வாழ்க்கை காப்புறுதி இழப்பீட்டை பெற்றுக் கொள்ளுதல்

Related Articles