விவசாயம், கால் நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மற்றும் விவசாயத் திணைக்களம், ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் விதை உற்பத்தி, உத்தரவாதப்படுத்தல் மற்றும் அடையாள காணும் பொறிமுறையை (Seed Production, Certification & Traceability System) ஆரம்பிக்கும் நிகழ்வு விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே டி லால்காந்த தலைமையில் இடம்பெற்றது.
இது டிஜிட்டல் புத்தாக்கத்தின் ஊடாக இலங்கையின் விதை உற்பத்தி பிரிவை நவீன மயப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முக்கியமான படிமுறையாகும்.


