பத்தரமுல்லையில், இலங்கை ஜப்பான் நட்புறவுப் பாதையின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்..

பத்தரமுல்லையில், இலங்கை ஜப்பான் நட்புறவுப் பாதையின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்..
  • :
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கொழும்பு பிரதான பொருளியலாளர் அலுவலகத்தின் மேற்பா்வையின் கீழ் பத்தரமுல்லையில், இலங்கை ஜப்பான் நட்புறவுப் பாதையின் அபிவிருத்திப் பணிகள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர், வைத்தியர் பிரசன்ன கனசேன தலைமையில் நேற்று (28) ஆரம்பமானது.
 
2 கி.மீ நீளமுள்ள இந்த வீதி, கார்பட் இட்டு அபிவிருத்தி செய்யப்படும், இதற்கான செலவு ரூ. 203 மில்லியன் ஆகும். இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், இந்த வீதியின் அபிவிருத்திப் பணிகள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, அனைத்து புனரமைப்புப் பணிகளையும் 2026 பெப்ரவரி 09ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.

Related Articles