தற்போது நடைபெற்று வரும் பாதுகாப்பு கலந்துரையாடலின் ஒரு அங்கமாக, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொத்தா (ஓய்வு) செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீரை சந்தித்தார்.
பாதுகாப்பு செயலாளருடன் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட மற்றும் இலங்கை இராணுவ பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க ஆகியோரம் இச்சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.
பிறிதொரு சந்தர்ப்பத்தில், பாதுகாப்புச் செயலாளர் பாகிஸ்தானின் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் திரு. அஹத் கான் சீமாவையும் சந்தித்தார்.
இந்த சந்திப்புகள் இலங்கை அதன் அண்டை நாடுகளுடன் இருதரப்பு பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சந்திப்பின் போது நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.