ஐரோப்பிய சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இடையே சந்திப்பு 

ஐரோப்பிய சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இடையே சந்திப்பு 
  • :

நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐரோப்பிய சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்துடன் இன்று (30) கலந்துரையாடலில் ஈடுபட்டனர். 

இக்கலந்துரையாடலில் ஐரோப்பிய சங்கம் இலங்கைக்கு தொடர்ந்து வழங்கும் ஒத்துழைப்புக்கள் தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத் நன்றிகளைத் தெரிவித்தார். 

 

  GSP+ நிவாரணம் (சாதாரண மயமாக்கப்பட்ட விருப்பு யோசனை முறை) நாட்டின் பொருளாதார விருத்திக்காக மாத்திரமன்றி வறுமை இல்லாது ஒழிப்பதற்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதாக அமைச்சர் பிரதிநிதிகளுக்கு குழுவுக்கு தெளிவுபடுத்தினார். 

 

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கிடைக்கப் பெற்றுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக அமைச்சர் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார். 

 

நாட்டில் பிரிவினை முரண்பாடு, சமய முரண்பாடு பதிவாகாமல் இருப்பதுடன் இன ஒற்றுமை அரசாங்கத்தின் பிரதான கொள்கையாகும்.

 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மலையக மக்களின் வரவேற்பு புதிய அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளமை விசேட அம்சமாகும். 

 

 2024 பொதுத் தேர்தலின் போது வட மாகாணத்தின் சகல மாவட்டங்களையும் வெற்றி கொண்டமை அரசாங்கம் பெற்றுள்ள மக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கின்றது. 

 

புதிய அரசாங்கத்தின் கீழ் ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதுடன் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

 

 2024 பொதுத் தேர்தலுக்காக அரச சொத்துக்களை பயன்படுத்தாமை, தேர்தலின் பின்னர் பிரச்சார செயற்பாடுகள் இடம்பெறாமை சிறப்பம்சமாகும். சுயாதீன ஆணைக்குழுவினால் செயற்பாடுகளுக்கு தலையீடு செய்யாது சுயாதீனமாக செயல்படுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமையும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக, குறித்த காலப் பகுதியில் தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

 

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக ஆராய்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் அக்குழு மூன்று மாத காலத்திற்குள் இது தொடர்பான அறிக்கை ஒன்றை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கவுள்ளது. 

 

பொருளாதார முன்னேற்றம் தொடர்பாக கருத்துக்களை முன்வைத்த அமைச்சர் கடந்த காலப்பகுதியில் அரசாங்கத்தின் அதிக கவனம் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு செலுத்தப்பட்டதாகவும்,

பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டத்தை அங்கீகரித்துக் கொள்வது விசேட தடை தாண்டல் என்றும் அமைச்சர் பிரதிநிதிகள் குழுவுக்கு எடுத்துக்காட்டினார். அவ்வாறு பல்வேறு அரசாங்கங்களுடன் இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு முடிந்தமை புதிய அரசாங்கம் பெற்றுள்ள விசேட வெற்றிகளாகும்.

 

அரசாங்கத்தின் பிரதான திட்டமான இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாது ஒழிப்பதுடன் சம்பந்தப்பட்டதாக ஐந்து வருட திட்டத்தை தயாரித்துள்ளதாகவும் அமைச்சர் விபரித்தார். 

 

இதனுடன் சம்பந்தப்பட்ட கட்டளைச் சட்டங்கள் சில அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவை எதுவும் அரசியல் பழிவாங்கல் அல்ல. 

 

அது தவிர பாதாள உலகக் குழுவினரை தடுப்பது மற்றும் போதைப் பொருள் பாவனையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார். 

 

ஐரோப்பிய சங்கத்தின் பிரதிநிதிகள் குழு புதிய அரசாங்கத்தை வாழ்த்தியதுடன் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு இணங்க அரசாங்கம் செயற்படுகின்றமை தொடர்பாக பாராட்டுக்களை தெரிவித்தனர். 

 

அவ்வாறே புதிய அரசாங்கம் பின்பற்றுகின்ற நல்ல நடைமுறைகளைப் பிரதிநிதிகள் குழுவும் பாராட்டியது. 

 

 

சுயாதீன ஆணைக்குழு சுயாதீனமாக செயல்படுவதற்கு வாய்ப்பு வழங்குதல் மற்றும் அது தொடர்பான கொள்கைகளை செயல்படுத்தியதற்கும் தூதுக்குழு பாராட்டியது.

 

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பான காலப் பகுதியுடன் செயல்படுத்தப்பட்டதையும் தூதுக்குழு பாராட்டியதுடன் தொழில்நுட்ப உதவிகள் அவசியமாயின் அவற்றை வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.  

 

GSP+ நிவாரணத்தை வழங்குவதற்காக இலங்கை இந்து சமுத்திரத்தில் முக்கியமான கேந்திர ஸ்தானத்தில் அமைந்துள்ளமை சாதகமானதாகக் கருத்தில் கொள்வதாகவும், இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை தொடர்பாக தயாரிக்கப்படும் அறிக்கை முக்கியமானது என்றும் வலியுறுத்தப்பட்டது. 

 

இது தவிர 2028 ஜனவரி அளவில் தொழில் பிரச்சினையை மற்றும் தொழில் சட்டத்துடன் தொடர்பான புதிய நிபந்தனைகள் தொடரை தயாரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அதற்கு தயாராகுமாறும் அதன் போது GSP+ நிவாரணம் செயல்படுத்தப்படும் என்றும் பிரதிநிதிகள் அமைச்சருக்கு தெளிவுபடுத்தினர். 

 

இக்கலந்துரையாடலில் ஐரோப்பிய சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை மற்றும் மாலைதீவிற்கான தூதுவர் காமன் மொரேனோ (Carmen Moreno), வர்த்தக மற்றும் பொருளாதாரப் பாதுகாப்புத் தொடர்பான பொது, கொள்கை அதிகாரி கைடோ டொலாரா ( Guido Dolara), ஐரோப்பிய வெளிவிவகார செயற்பாடுகளுக்கான இலங்கை அதிகாரி கலிஜா அகிஷேவா (Galija Agisheva) உட்பட பலர் கலந்து கொண்டனர். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சை பிரதி நித்துவப்படுத்தி அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]