பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் ஆகியோர் பங்கேற்ற முதலாவது பிரிவேன சபை கூட்டம் நேற்று (24) கல்வி அமைச்சின் சபை மண்டபத்தில் நடைபெற்றது.
பிரிவேன கல்வியின் மேம்பாட்டுக்காக முடிவுகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுக்கும் பிரிவேன கல்விச் சபையின் 202வது கூட்டம் இதுவாகும். இதில் சாசன மறுமலர்ச்சிக்கும், பிரிவேன கல்வியின் மேம்பாட்டுக்கும் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
பிரிவேன ஆசிரியர்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குதல் மற்றும் பிரிவேன கல்வியின் மேம்பாட்டுக்குத் தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.