சுற்றுலாத் துறையின் மூலம் அதிக சுற்றுலா தலங்களைக் கொண்ட மாவட்டமாக பொலன்னறுவை மாவட்டத்தை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்ட கலந்துரையாடல் ஒன்று சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க தலைமையில் அண்மையில் பொலன்னறுவையில் நடைபெற்றது.
சுற்றுலாத் துறை மூலம் இலங்கைக்கு அதிக டொலர்களை ஈட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.


