Youth Link Sri Lanka உள்நாட்டு இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று (11) பிற்பகல் 3.00 மணிக்கு இளைஞர் விவகார பிரதி அமைச்சர் திணிந்து சமன் ஹேநாயக்க தலைமையில் கம்பஹா நகரில் இடம்பெறவுள்ளது.
இம்முறை நிகழ்வின் உபசரிப்பு மாவட்டமாக கம்பஹா மாவட்டம் செயற்படுவதுடன், வரவேற்கப்பட்ட மாவட்டங்களாக முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி அந்த மாவட்டங்களின் இளைஞர் யுவதிகள் கம்பஹா மாவட்டத்திற்கு வருகை தந்து பல்வேறு பரிமாற்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது


