பதிவாளர் நாயகமாக பதவியேற்கும் முதல் பெண்
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி சசிதேவி ஜலதீபன், நேற்று (25) பதிவாளர் நாயகத் திணைக்களத்தில் புதிய பதிவாளர் நாயகமாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
160 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் முதல் பெண் பதிவாளர் நாயகமாக திருமதி சசிதேவி ஜலதீபன் வரலாற்றில் இணைகிறார்.


