டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கும், இயல்புவாழ்க்கையை மீளமைப்பதற்கும் ஆரம்பிக்கப்பட்ட Rebuilding Sri Lanka நிதியத்திற்கு Sri Lanka Logistics & Freight Forwarders Association இனால் 32 இலட்சம் ரூபா நிதி நன்கொடை வழங்கப்பட்டது.
இதற்கான காசோலையை Sri Lanka Logistics & Freight Forwarders Association தலைவர் Andre Fernando வினால் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவிடம் இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
Sri Lanka Logistics & Freight Forwarders Association சார்பில் அதன் செயலாளர் ரியர் அட்மிரல் ராஜப்பிரிய சேரசிங்க மற்றும் பொருளாளர் பிரியான் சில்மன் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.


