தபால் திணைக்களத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகள் நாளை (17) முதல் இரத்து

தபால் திணைக்களத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகள் நாளை (17) முதல் இரத்து
  • :

தபால் திணைக்களத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகள் நாளை (17.08.2025) முதல் இரத்து செய்யப்படும் என்று தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமார நேற்று 15.08.2025 அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிவிப்பின்படி, அஞ்சல் திணைக்களத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் நாளை (17) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து துணை தபால்மா அதிபர்கள், தலைமை கணக்காளர், தலைமை உள்ளக கணக்காய்வாளர், தலைமை கணக்காளர் (முத்திரைகள்) ஆகியோர் இது குறித்து அனைத்து தொடர்புடைய அதிகாரிகளுக்கும் தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கடிதத்தின் மூலப்பிரதி சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் மற்றும் அஞ்சல் சேவை தொடர்பான அனைத்து நிறுவனத் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles