புதிய உற்பத்தி, மீள் உற்பத்தி, உப உற்பத்தி போன்ற மானிய முறைகளின் மூலம் வழங்கப்படும் தென்னை விதையை ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக மேற்பார்வை செய்து பாதுகாக்கும் விதமாக தென்னை மரங்களுக்கு காப்புறுதி செய்யும் முறை விவசாய மற்றும் கமநலக் காப்புறுதி சபையினால் தென்னை உற்பத்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் போது காப்புறுதி காலம் 15 வது நாளில் இருந்து 01 வருடம் வரை. காப்புறுதி தவணைக் கட்டணமாக ஒரு தென்னை மரத்திற்கு 67.50/- ரூபாய் என்பதுடன் மொத்த காப்புறுதி ரூபாய் 550/- தொகையாக வழங்கப்படும்.
தென்னை பயிர்ச்செய்கை சபை, விவசாய மற்றும் கமநலக் காப்புறுதி சபை ஆகியன ஒன்றிணைந்த திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த காப்பருதி யோசனை முறை மூலம் வறட்சி , வெள்ளம், அடைமழை, சூறாவளி, மண்சரிவு, காட்டு யானைகளின் தாக்கம், காட்டு மிருகங்களின் தாக்கம், மின்னல், பீடைகளின் தாக்கம் போன்ற நிலைமைகள் தென்னை உற்பத்திக்கான காப்புறுதித் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படுகின்றது.
.


