இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாப்பனத்தினால் திருகோணமலையில் 4 எண்ணெய் தாங்கிகளை திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், அதில் 2 எண்ணெய் தாங்கிகளின் திருத்தவேலைகள் நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அந்தத் தாங்கிகளை பயன்படுத்துவதற்கு அவசியமான குழாய் கட்டமைப்பை (Pipeline Netw முன்னெடுக்கப்படுவதுடன், அந்தப் பராமரிப்பு பணிகளை விரைவாக நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் வலுசக்திப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே, சப்புக்கஸ் கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நவீன மயப்படுத்தி அதனை அன்றாடம் சுத்திகரிப்பு கொள்ளளவை 50,000 முதல் 100,000 வரை அதிகரிக்கும் பாரிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அதிகளவான எரிபொருள் சுத்திகரிப்பினால் வெளிநாட்டு அந்நியச் செலாவணியை சேகரிக்கும் இயலுமை அதிகரிப்பதாகவும், எரிபொருள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் இது முக்கியமானது என்றும் வலுசக்தி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது


