இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 'தூய இலங்கை' திட்டத்திற்கமைய, 12,500 க்கும் மேற்பட்ட படையினர் 2025 பெப்ரவரி 20 முதல் 2025 மார்ச் 07 வரை 380 பாடசாலைகளில் சுத்தம் செய்யும் திட்டத்தில் ஈடுபட்டு புனரமைப்புப் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.
கிட்டத்தட்ட 140 சேதமடைந்த பாடசாலை கட்டிடங்களை புதுப்பித்தல், கூரைகளை சரிசெய்தல், பூச்சு பூசுதல் மற்றும் எல்லை வேலிகளை சரிசெய்தல் போன்றவை அடங்கும். மேலும், அவர்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடிய சுமார் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட 3,100 மேசைகள் மற்றும் கதிரைகளையும் சரிசெய்துள்ளனர்.
அதனடிப்படையில், 1 வது இலங்கை கவச வாகன படையணி மற்றும் 6 வது கள இலங்கை பீரங்கி படையணியின் படையினர் 2025 மார்ச் 10 அன்று ஜா-எல பமுனுகம கொன்சால்வெஸ் கல்லூரியில் சுத்தம் செய்தல் மற்றும் புனரமைப்பு திட்டங்களுக்கு உதவினர். மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 1 வது இலங்கை கவச வாகன படையணி மற்றும் 6 வது கள இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன், 6 வது கெமுனு ஹேவா படையணி படையினர் 2025 மார்ச் 10 ஆம் திகதி உடையார்கட்டிலுள்ள முல்/மூங்கிலாறு ஆரம்ப பாடசாலையில் அப்பிரதேச பொதுமக்களின் பங்கேற்புடன் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர்.
அதே போன்று, 6 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் 2025 மார்ச் 10 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் (கிழக்கு) பிரதேசத்தில் பொதுமக்களின் பங்கேற்புடன் சிரமதான திட்டத்தை நடாத்தினர்