இன்று உலக சசமாதானத்துக்கான நடைபயணத்தின் நான்காம் நாள் ஆகும்.
வணக்கத்திற்குரிய பன்னாகர தேரர், அவரது தலைமையில், மாவனெல்ல, பெலிகம்மெவில் உள்ள வித்யாவர்தன பொத்குல் விகாரையில் இருந்து, இன்று (25) சமாதானத்துக்கான நடைபயணத்தின் நான்காம் நாள் பயணத்தைத் ஆரம்பித்தார்.
தேரர்கள் நேற்று காலை கண்டியிலிருந்து தங்கள் பயணத்தைத் தொடங்கி, பிற்பகலில் இவ்விகாரையை வந்தடைந்தனர்.
இந்த சமாதானப் பேரணி, மாவனெல்ல, பெலிகம்மன, வித்யாவர்தன பொத்குல் விகாரை, குடுகல சந்தி, கேகாலை, கலிகமுவ வழியாக இன்று தோலங்கமுவ தேசியப் பாடசாலையைச் சென்றடையை திட்டமிடப்பட்டுள்ளது.
நாளை தோலங்கமுவ தேசியப் பாடசாலையிலிருந்து ஆரம்பிக்கும் இந்தப் பேரணி, அம்பேபுஸ்ஸ, வரக்கபொல, பஸ்யால, நிட்டம்புவ, திஹாரிய வழியாகச் சென்று யக்கல அபேசேகரராமயை வந்தடையும்.


