உயர்கல்வித் துறைக்கான விரிவான தேசியக் கொள்கையை உருவாக்கும் நோக்கத்துடன், உயர்கல்வி கொள்கை மேம்பாட்டுக்கான தேசியக் குழு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் கூடியது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பேராசிரியர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தேசியக் கல்வி கண்டுபிடிப்பு முன்னுரிமைகள், உலகளாவிய தரநிலைகள் மற்றும் உள்ளூர் தேவைகளுக்கு இடையில் ஒருமித்த கருத்தை உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
உயர்கல்விக்கான தேசியக் கொள்கையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும், தற்போதுள்ள கொள்கைகள், சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளை மதிப்பாய்வு செய்து புதிய சகாப்தத்தின் சவால்களுக்கு ஏற்ப அவற்றைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.


