வனப்பாதுகாப்பு நாயகமாக பணிபுரிந்த திரு. ஈ.ஏ.பி.என். எதிரிசிங்க அவர்கள் 60 வயது பூர்த்தியடைந்தமையால் 2025.07.08 ஆம் திகதி தொடக்கம் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.
அதற்கமைய, சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, வெற்றிடமாகவுள்ள வனப்பாதுகாப்பு நாயகம் பதவிக்கு இலங்கை விஞ்ஞான சேவை விசேடதர அதிகாரியும், தற்போது வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் மேலதிக வனப்பாதுகாப்பு நாயகமாக (வனப்பாதுகாப்பு, நடவடிக்கைகள் மற்றும் முகாமைத்துவம்) பணிபுரிகின்ற திரு. டப்ளிவ்.டப்ளிவ்.எம்.பி.எஸ்.சீ. பாலமகும்புர அவர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.


