வீழ்ச்சியடைந்துள்ள இரப்பர் உற்பத்தியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தேசிய திட்டத்தின் திட்டங்களை உடனடியாக மேற்கொள்ளுமாறு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
நாட்டில் இரப்பர் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், இலங்கை இரப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் அண்மையில் (21) நடைபெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்படி, திட்டத்தைப் பற்றி விவாதிக்கவும், அந்தத் திட்டத்தின்படி எதிர்காலத் திட்டத்தைத் தயாரிக்கவும் கூட்டு விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
இரப்பர் உற்பத்தியை அதிகரிக்க இரப்பர் உற்பத்தியாளர்களின் பங்களிப்பைப் பெறுவதற்குத் தேவையான வேலைத்திட்டத்தை தயாரிக்கவும் அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இரப்பர் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருடனும் தனித்தனியாக கலந்தாலோசித்து இரப்பர் உற்பத்தியை மேம்படுத்த முடியாது என்றும், இரப்பர் உற்பத்தி மற்றும் தொழில்துறையில் ஈடுபட்டுள்ள அனைவரையும் ஒன்றிணைத்து இந்த நாட்டில் இரப்பர் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து கூட்டாக கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
கடந்த காலங்களில் இரப்பர் குறித்து எவ்வளவு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற கேள்வியை எழுப்பிய அமைச்சர், எதிர்காலத்தில் குறைபாடுகளைக் குறைத்து இரப்பர் தொடர்பான ஆராய்ச்சியை அதிகரிப்பது அவசியம் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.