கமநல மற்றும் விவசாய காப்புறுதிச் சபையினால் அந்தந்த பயிர்களில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்காக அவர்களுக்கு வழங்கக்கூடிய தவணைக் கட்டணத்தில் காப்புறுதி இழப்பீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக புதிய காப்புறுதித் திட்டங்கள் பல ஆரம்பிக்கப்பட்டன.
கறுவா உற்பத்தி காப்புறுதி , இறப்பர் உற்பத்தியாளர்களுக்கான காப்புறுதி முறை, வாழைத் தோட்டச் செய்கைக்கான காப்புறுதி, களஞ்சிய சாலைக்கான காப்புறுதி, தென்னை பனை உற்பத்தியாளர்களுக்கான காப்புறுதி, அவசர விபத்துக் காப்ஞ, கறுவா உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான அவசர விபத்துக் காப்பீடு, தேயிலை உற்பத்தியாளர்களுக்கான காப்புறுதி என பல இதில் அடங்கும்.
“வளமான நாடு - அழகான வாழ்க்கை” என்ற கோட்பாட்டை விவசாய உற்பத்தியாளர்களின் வாழ்க்கைக்குள் புகுத்தி, விவசாயம் மேற்கொள்ளும் போது எதிர்கொள்ளும் ஆபத்துக்களை முகாமைத்துவம் செய்து, அவர்களின் விவசாயத்தை பாதுகாப்பதற்காக மற்றும் அதனால் அவர்களின் பொருளாதார பலத்தை முன்னேற்றுதலே இந்தக் காப்புறுதி யோசனை முறை நடைமுறைப்படுத்தப்படுவதன் அடிப்படை என கமநல மற்றும் விவசாய காப்புறுதிச் சபை குறிப்பிட்டுள்ளது


