வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அரசமுறைப் பயணத்திற்காக நாட்டிற்கு வருகை தந்தார்

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அரசமுறைப் பயணத்திற்காக நாட்டிற்கு வருகை தந்தார்
  • :

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (டோ லாம்), ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கான அரசமுறைப் பயணத்தை ஆரம்பித்து, நேற்று நாட்டை வந்தடைந்தார்.

கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய, வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி மற்றும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளர் டோ லாம் (டோ லாம்) உள்ளிட்ட தூதரகக் குழுவினரை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வரவேற்றார்.

இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக படபெந்தி, வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினரும் பங்கேற்றனர்.

ஜனாதிபதியுடன் வியட்நாம் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் குழுவினரும் உடன் வந்திருந்தனர்.

Related Articles