யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட குழுவினர் இன்று (30) யாழ் பலாலி விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.
விமான நிலையத்தின் தற்போதைய நிலமைகள் தொடர்பிலும், தேவைப்பாடுகள் தொடர்பிலும், அடுத்த கட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி பணிகள் தொடர்பிலும் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் தொழிநு ட்பவியலாளர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடினர்.
இந்த விஜயத்தில்பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் ஸ்ரீபவனந்தராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.