யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய முடியாது. புதிய அரசாங்கத்தின் கீழ் யாழ்ப்பாண நூலகத்தை அபிவிருத்திசெய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஆகஸ்ட் 03 அன்று யாழ்ப்பாண தேசிய நூலகத்திற்கான கண்காணிப்பு விஜயத்தின் போது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார். நூலகத்தில் நடத்தப்படும் பாலர் பாடசாலை பிள்ளைகள் மற்றும் நூலகத்திற்கு வருகைதந்திருந்த பிள்ளைகளுடன் பிரதமர் சுமுகமான உரையாடலிலும் ஈடுபட்டார்.


