2026 வரவு செலவுத் திட்டத்தில் மகளிர் அபிவிருத்தி திட்டத்திற்கு 20 கோடி ரூபாய்
2026 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்திற்கமைய 'மகளிர் அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட வேலைத்திட்டத்தை' அமுல்படுத்தல்
விசேட கவனம் செலுத்த வேண்டிய பொருளாதார மட்டங்களிலுள்ள பெண்களை இலக்காகக் கொண்டு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்குகின்ற இலங்கை பெண்கள் பணியகத்தின் மூலம் 'தொழில்முயற்சி அபிவிருத்தி மூலம் பெண்களை வலுவூட்டல்' வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.
அதற்கு இணையாக 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் 'மகளிர் அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட வேலைத்திட்டத்திற்கு' 200 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிரதானமாக நடுத்தர மட்டத்திலுள்ள முயற்சியாண்மை பெண்களை உயர்மட்ட தொழில்முயற்சிகளாக மாற்றுதல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தையில் வாய்ப்புக்களை உருவாக்கல், நடுத்தர மட்டத்திலான வருமானங் கொண்ட பெண்களை அரச தனியார் பங்காண்மையின் கீழ் பொருளாதார ரீதியாகப் பலப்படுத்தல், தொழில் வாய்ப்புக்கள் இல்லாத யுவதிகளை தொழில்முயற்சிகளில் ஈடுபடுத்தல், பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு ஆளாகியுள்ள பெண்களுக்கு ஆதரவளித்தல் மற்றும் உத்தியோகத்தர்களின் இயலளவு விருத்தி போன்றன இவ்வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, 11 பிரதான வேலைத்திட்டத் துறைகளின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள வருடாந்த செயற்பாட்டுத் திட்டம் 2026 இற்கு இணங்க, உத்தேச வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு பதில்கடமையாற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


