கேகாலை மாவட்டத்தில் 78வது சுதந்திர தின கொண்டாட்டங்களுடன் இணைந்து நடத்தப்படவுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் மாவட்ட செயலாளர் ஜகத் ஹேரத் தலைமையில் இன்று (22) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்த முறைஇ மாவட்ட செயலக வளாகத்தில் விழா நடைபெற உள்ளது, அதன் பின்னர் கேகாலை சுதந்திர மாவத்தையில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெறும்.
சுதந்திர தின கொண்டாட்டங்களுடன் இணைந்து கேகாலை நகரத்தை சுத்தம் செய்வதற்கான சிரமதான நிகழ்வை நடத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டப்பட்டது.


