நிட்டம்புவவில் 60 கிலோகிராம்களுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளார்.
கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப் படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி, நிட்டம்புவ பகுதியில் உள்ள அரலிய லேன், பின்னகொல்ல வட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்தப் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.


