போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினூடாக 'மறுமலர்ச்சிக்கான பாதை' கிராமிய வீதி அபிவிருத்தி வேலைதிட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் 2026.01.02 நேற்றைய தினம் இந்த புத்தாண்டின் முதல் நிகழ்வாக வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைக்கு சொந்தமான ஹெலம்பகச்வவே வீதியின் ஆரம்ப நிகழ்வு அப்பிரதேச மக்களுடன் இணைந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ்வீதி 1 KM நீளம் 25 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நேரடி கண்காணிப்பில் ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, போக்குவரத்து நெடுஞ்சாலை மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரின் இணைப்பு செயலாளர், பிரதேச சபை தவிசாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை மாகாண பணிப்பாளர், நிறைவேற்று பொறியியலாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கிராம நலன்விரும்பிகள் ஊர் மக்கள் கலந்துகொண்டனர்.
அத்துடன் இன்று வவுனியா மாவட்டத்தில் 187 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் மேலும் 8 வீதிகளின் ஆரம்ப நிகழ்வும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


