சுற்றாடலை பாதுகாக்கும் பல்வேறு வேலைத்திட்டங்கள் கிரானில் முன்னெடுப்பு

சுற்றாடலை பாதுகாக்கும் பல்வேறு வேலைத்திட்டங்கள் கிரானில் முன்னெடுப்பு
  • :

அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா அவர்களின் எண்ணக்கருவில் உதித்த “கிளீன் ஸ்ரீ லங்கா" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் "மகிழ்ச்சியான நாடு கிராமம் தோறும்” எனும் நிகழ்ச்சித் திட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகம், கோறளைப்பற்று தெற்கு - கிரான் பிரதேச செயலகத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அதன் ஒரு அங்கமாக சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சுற்றாடலை பாதுகாக்கும் பல்வேறு வேலைத்திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் கிரான்கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் திருமதி.பி.நிருபா அவர்களின் ஏற்பாட்டில் கிரான் பிரதேச செயலக பிரிவில் உள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் கஷ்ட பிரதேசங்களில் ஒன்றான கோறளைப்பற்று தெற்கு - கிரான் பிரதேசத்தை கட்டியெழுப்பும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் கிளீன் ஶ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இத்திட்டத்தின் ஊடாக சுற்றாடலை பாதுகாக்கும் நோக்கில் கோரகல்லிமடு - பறங்கியாமடு கிராமத்தில் உள்ள தோனா அமைந்துள்ள பகுதியில் 25 மதுர மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், கோரகல்லிமடு ரமணமகறிசி பாடசாலைக்கு அருகாமையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 10 பூங்க மரக் கன்றுகளும் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிதிகளினால் நடப்பட்டது.

அத்தோடு பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் 3 தொட்டிகள் கிரான் மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் நிறுவப்பட்டன.

Related Articles