புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் பயன்பாட்டிற்காக இந்திய உதவி உயர் ஸ்தானிகராலயம், அண்மையில் (24) கண்டி புற்றுநோய் சங்கத்திற்கு ரூ. 5 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது.
இந்திய உதவி உயர் ஸ்தானிகர் திருமதி சரண்யா வி.எஸ்., சங்கத்தின் தலைவர் மோகன் சமரகோனிடம் அந்தப் பொருட்களை கையளித்தார்.
வழங்கப்பட்ட நன்கொடைகளில் புற்றுநோய் நோயாளிகளுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள், நோயாளிகளின் பயன்பாட்டிற்கான உடைகள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் என்பனவும் அடங்கியிருந்தன.


