முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சிறப்புற நடைபெற்ற ” இப்தார்” நிகழ்வு

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சிறப்புற நடைபெற்ற ” இப்தார்” நிகழ்வு
  • :
முஸ்லிம்களின் மக்களின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான இப்தார் நிகழ்வு இன்றைய தினம் (11) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் பி.ப 5.15 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

 ஆரம்ப நிகழ்வின் கிராஆத் இனை ஆர்.நௌபல் மௌலவி வழங்கியதோடு வரவேற்புரையினை மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ. எம. எம். அஸாம், அவர்கள் வழங்கினார்.

ஆசியுரையினை சர்வமதத் தலைவர்கள் வழங்கியதோடு ரமழான் சிந்தனையினை எம்.ஆர்,பைரூஸ் மௌலவி வழங்கினார்.
மேலும் தெரிவு செய்யப்பட்ட 21 அஹதியா பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இறுதியாக பி.ப 6.20 மணிக்கு நோன்பு திறக்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன் நன்றி உரையுரையினை மாவட்ட செயலக முஸ்லிம் கலாசார உத்தியோகத்தர் மௌலவி ஆதில் அவர்கள் நிகழ்த்தியதுடன் நிகழ்வு நிறைவடைந்ததது.
இந்த நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்(காணி) எஸ்.ஜெயக்காந், மாவட்ட செயலக பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles