026 - T20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையிலும் இந்தியாவிலும் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் நேற்று (01.02.2026) மு.ப 03.15 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு எடுத்துவரப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்றலில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன், யாழ் மாநகர சபை முதல்வர் கெளரவ மதிவதனி விவேகானந்தராஜா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் T20 உலகக்கிண்ணம் காட்சிப்படுத்தப்பட்டது.
இதன் போது அதிகாரிகள், விளையாட்டு வீர வீராங்கனைகள், ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு கிண்ணத்தை பார்வையிட்டனர்.தொடர்ந்து கலாசார நடனமும் நடைபெற்றது.
தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், இலங்கையில் உலகக்கிண்ணம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இக் உலகக்கிண்ணம் இலங்கையில் பல்வேறு நகரங்களில் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றதற்கமைய இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு கிண்ணம் எடுத்துவரப்பட்டுள்ளது.
உலகக்கிண்ணத் தொடர் தொடர்பான விழிப்புணர்வையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் நோக்கிலும் கிரிக்கெட் இரசிகர்கள் இந்த உலகக் கிண்ணத்தை நேரில் கண்டு மகிழ்வதற்காக இக் கிண்ணப் நாட்டின் முக்கிய நகரங்களில் இது காட்சிப்படுத்தப்படுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


