திருகோணமலை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

திருகோணமலை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
  • :

திருகோணமலை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (31) மாவட்ட செயலகத்தின் பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து குறித்த கூட்டம் ஆரம்பமானது.

இந்தக் கூட்டமானது போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களின் பங்குபற்றலுடன் , மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான ரொஷான் அக்மீமன, எஸ். குகதாசன், இம்ரான் மஹ்ரூப்,  நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) திருமதி எச்.கே.எஸ்.எஸ். குணசேகர, நகர அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) திருமதி. டி.ஏ. கமேஜ், கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், நகர சபை மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் முப்படைகளின் உயரதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மாவட்டத்தின் வீதி அபிவிருத்தி தொடர்பான பல முக்கிய விடயங்கள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி, பாலங்கள் மற்றும் மதகுகள் சீரமைப்பு, சமிக்ஞை விளக்குகள் நிறுவல், பஸ் தரிப்பிடங்கள் அமைத்தல் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், போக்குவரத்து துறையுடன் தொடர்புடைய பல அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர்.

மாவட்டத்தில் போக்குவரத்து சேவைகளை மேலும் மேம்படுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பானதும் வசதியானதுமான பயண சூழலை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், மாவட்ட அபிவிருத்தியை முன்னெடுக்கும் நோக்கில் பல அபிவிருத்தித் திட்டங்களும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதிக்காக முன்மொழியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles