எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பானது (24) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் 8.30 மணியளவில் ஆரம்பமானது.
உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு (24) முதல் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டு சுமூகமான முறையில் நடைபெற்று வருகின்றது.
அஞ்சல் மூல வாக்களிப்பானது நேற்று மற்றும் இன்றைய தினத்தை தொடர்ந்து ஏப்ரல் மாதம் 28 மற்றும் 29 ஆம் திகதிகளிலும் நடைபெறவுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை அஞ்சல் மூல வாக்களிப்பிற்காக 14337 அரச உத்தியோகத்தர்கள் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.