அமைச்சின் தலைவர்களின் சுருக்கமான விளக்கக்காட்சியுடன் முடிவடையும். அங்கு மலேரியா கட்டுப்பாட்டு பிரச்சாரத்தின் வீதி நாடகக் குழுவின் நிகழ்ச்சியும் நடைபெறும்.
மலேரியாவின் அறிகுறிகளாக, காய்ச்சல், சளி, உடல் வலி, வியர்வை, கடுமையான சந்தர்ப்பங்களில், வலிப்பு மற்றும் சுயநினைவு இழப்பு, அத்துடன் சுவாசிப்பதில் சிரமம் போன்றன ஏற்படக்கூடும்.மலேரியா பரவியுள்ள ஒரு நாட்டிற்கு பயணம் செய்யும் போது, புறப்படுவதற்கு முன்னர், மலேரியா தடுப்பு மருந்துகளைப் பெறுவது மிகவும் முக்கியம்.
இந்த மருந்துகளை நாரஹேன்பிட்டவில் உள்ள மலேரியா கட்டுப்பாட்டு பிரச்சார தலைமையகத்திலிருந்தும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள உள்நாட்டு மலேரியா கட்டுப்பாட்டு அலுவலகங்களிலிருந்தும் இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை, நாரஹேன்பிட்டவில் உள்ள மலேரியா எதிர்ப்பு பிரச்சாரப் பிரிவின், 071 2841767 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது