ஸ்ரீ தலதா தா யாத்திரையை முன்னிட்டு கண்டி நகரத்தை பரிசுத்தப்படுத்தும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் யாத்திரைக்கு வந்த மக்கள், பிரதேச நிறுவனங்களில் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக நேற்று (27)மேற்கொள்ளப்பட்டது.
க்ளீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் அதிகாரிகள், இளைஞர்கள் மற்றும் முதியோர் சமூகத்தில் இருந்து தன்னார்வக் குழுக்கள் சில தமது பங்களிப்பை வழங்கியமை விசேட அம்சமாகும்.
அதன்படி கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் முழு கண்டி நகரமும் வெற்றிகரமாக பரிசுத்தப்படுத்தப்பட்டது.
குப்பைகளை அகற்றும் பணி முறையாக இடம் பெறுவதற்காக மக்கள் மனதில் பண்பாட்டில் பண்பாட்டை பழக்கப்படுத்துவதன் பெறுமதியை உறுதிப்படுத்தும் விதமாக ஒழுங்குபடுத்தப்பட்ட இத்திட்டத்தை வெற்றி கொள்வதற்கு மக்களின் ஒத்துழைப்பு குறைவின்றி காணப்பட்டது.
தலதா யாத்திரையை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையை மையப்படுத்தி கடந்த சில தினங்கள் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.