இந்தியாவின் ரஞ்சியில் இடம்பெற்ற 4 வது தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் தாய் நாட்டிற்காக மற்றும் இலங்கை இராணுவத்திற்குப் புகழ் பெற்றுத் தந்த 12 தங்கம, 8 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுத் தந்த இலங்கை இராணுவ வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் சிறப்பான செயல்திறனுக்காக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ RSP ctf-ndu psc IG வினால் பாராட்டி, கௌரவமளிக்கப்படனர்.
வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை பாராட்டும் நிகழ்வு நேற்று (30) இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றதுடன், இராணுவத் தளபதியினால் வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் வெற்றி தனிப்பட்ட முறையிலும் பாராட்டப்பட்டது.

இந்நிகழ்வில் எதிர்காலப் போட்டிகளுக்காக அவர்களின் விளையாட்டு வீரர்களின் தொடர்ச்சியான வெற்றியை ஊக்குவிக்கும் வகையில், இராணுவத் தளபதி அவர்களுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.
அவர்களின் சிறந்த செயல்திறனை அங்கீகரிக்கும் விதமாக, 18 இராணுவ விளையாட்டு வீரர்களும் அடுத்த தரவரிசைக்கு பதவி உயர்வு பெற்ற
னர்.


