வானிலை முன்னறிவிப்பு

வானிலை முன்னறிவிப்பு
  • :

2025 மே மாதம் 22 ஆம் திகதி க்கான வானிலை முன்னறிவிப்பு 

2025 மே மாதம் 22 ஆம் திகதி காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது 

 தென்மேற்கு பருவ காலநிலை தொடர்ந்தும் நாடு முழுவதும் நிலை பெற்று வருகிறது. 

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

 வடமத்திய மாகாணத்தில் மழை சிறிய அளவில் பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.

 வட மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் பிற்பகல் அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலை நட்டின் மேற்கு சரிவில் உள்ள பிரதேசங்களில் மற்றும் வடக்கு வடமத்தி வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருவோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது பயணிக்கும் காற்று மணித்தியாலத்திற்கு (30-40) வேகத்தில் வீசக் கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக ஏற்படும் கடும் காற்று மற்றும் இடி மின்னல் தாக்கங்களில் இருந்து தவிர்ந்து கொள்வதற்காக அவசியமான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Articles