காட்டு யானைகளைப் பாதுகாப்பதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
காட்டு யானைகள் அழிந்து வருவது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
காட்டு யானைகளுக்கும் மனித சமூகத்திற்கும் இடையிலான சமநிலையை சீர்குலைப்பதில் தலையிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்காக குறுகிய கால மற்றும் நீண்டகால அறிவியல் தீர்வுகள் கண்டறியப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.