அரசாங்க சேவையில் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாகன அனுமதி பத்திரத்தை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் எவ்வித கொள்கைத் தீர்மானங்களையும் எடுக்கவில்லை என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் நஜீத் இந்திக்க முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
வாகன அனுமதிப் பத்திரத்திற்காக தற்போது சந்தர்ப்பம் வழங்காவிட்டால் எதிர்பார்த்த பொருளாதார இலக்குகளை அண்மிப்பதற்கு அசௌகரியம் ஏற்படும் என பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க சேவையின் உயர் அதிகாரிகளுக்கு தற்போது 15,000 , முதல் 20,000 இடையிலான தொகையில் இவ் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது முன்னுரிமை தொடர்பான சிக்கல் அன்றி அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் வாகன அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்வதற்கு எவ்வித கொள்கைத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.