வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் 

வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் 
  • :
பெறுகை முறை மூலம் வெளிநாட்டுக் கடவுச்சீட்டுக்கள் 5 இலட்சம் அளவில் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவலக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
 
 
நிகழ்நிலை ஊடாக நாளொன்றை ஒதுக்கி, அந்த நாளில் வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். 
 
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த வாய்மொழி மூலமாக கேள்விக்கு பதில் அளிக்கும் போது அமைச்சர் நேற்று (23) பாராளுமன்றத்தில் இதனை குறிப்பிட்டார். 
 
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்;
 
நிகழ்நிலை ஊடாக நாளொன்றை ஒதுங்கிக் கொள்ள முடியும் என்பதுடன் அந்த தினத்தில் வருகை தந்து அதே நாளிலேயே வெளிநாட்டுக் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு முடியும். உதாரணமாக இன்று (23) ஆம் திகதி பெயரை ஒதுக்கிக் கொண்டால்  ஜூன் 27 ஆம திகதி கிடைக்கும். அப்படி என்றால் நிகழ் நிலை முறையில் நாளொன்றை எடுத்தால் சாதாரணமாக ஐந்து மாதங்கள் முன்னோக்கித் தான் தினம் ஒன்று கிடைக்கும்.
 
அவசரத் தேவைக்காக இத்தினத்திற்கு முன்னர் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாயின், அதற்கு அவசியமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 
 
நிகழ்நிலை ஊடாக தினத்தை ஒதுக்கிக்  கொண்டவர்களுக்காக ஒரு நாளைக்கு 800 கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படுகின்றன. அதுபோல் யாருக்காவது அவர்களின் அவசியத் தேவையை தெரியப்படுத்தி குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ள குழுவை சந்தித்து, அவசியமான தகவல்களை வழங்கி 650 கடவுச்சீட்டுக்கள் பெறப்படுகின்றன. அது தவிர வெளிநாட்டு தூதரகங்களின் ஊடாகவும் கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.  அதன்படி வெளிநாட்டில் உள்ளவர்களுக்காக 500 கடவுச்சீட்டுக்கள் தினமும் வழங்கப்படுகின்றன" என்றும் அமைச்சர் விபரித்தார்.
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]