ஆவணச் சான்றளிப்பு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன

ஆவணச் சான்றளிப்பு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன
  • :
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் கொன்சியுலர் விவகாரங்கள் பிரிவின், அனைத்து ஆவணச் சான்றளிப்பு சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
மின்னணு ஆவணச் சான்றளிப்பு அமைப்பில் (e-DAS) ஏற்பட்ட எதிர்பாராத செயலிழப்பின் காரணமாக இந்தத் தடை ஏற்பட்டுள்ளது.
இதன்படி, பத்தரமுல்லயில் உள்ள பிரதான அலுவலகம், யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, மாத்தறை மற்றும் குருநாகலையில் உள்ள அனைத்து பிராந்திய தூதரக அலுவலகங்களும் ஆவணச் சான்றளிப்பு சேவைகளை வழங்க முடியாதுள்ளன.
 
சேவை வழங்குநர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஒருங்கிணைந்து, ஆவணச் சான்றளிப்பு அமைப்பை விரைவில் சரிசெய்து, தாமதமின்றி சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே இணையவழியில் முன்பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரும், மேலதிக தகவல்கள் குறித்து, மின்னணு வழி முன்பதிவு முறை மூலம் தொடர்ந்து வழங்கப்படும் குறுஞ்செய்திகள் ஊடாக அறிந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..
 
ஆவணச் சான்றளிப்பு முறை சரிசெய்யப்பட்டவுடன், அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் உரிய முறையில் அறிவிக்கப்படும்.
எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இச்சிரமத்திற்கு அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு, பொதுமக்களிடம் இதயபூர்வ வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறது..
கொன்சியுலர் விவகாரங்கள் பிரிவு (வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு)

Related Articles