மிளகு, கோப்பி, பாக்கு, கொக்கோ, கராம்பு, சாதிக்காய், ஏலக்காய், வனிலா, வெற்றிலை, தேசிப்புல், காவட்டம்புல், கொடுக்காய் புளி, மஞ்சள் மற்றும் இஞ்சி போன்ற 14 ஏற்றுமதிப் பயிர்களை மேம்படுத்துவதற்குத் தேவையான அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஏற்றுமதி விவசாய திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.
23.06.2025 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் இது தொடர்பில் தீர்மானம் மெற்கொள்ளப்பட்டது. தற்போது 82,000 ஹெக்ரயார் நிலப்பரப்பில் இப்பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றதுடன், ஒருமில்லியன் பங்காளர்கள் ஏற்றுமதி விவசாயப் பயிரிடல் மற்றும் தொழிற்றுறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தால் 2025 ஆண்டு தொடக்கம் பங்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் கீழ்க்காணும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், இவ்வேலைத்திட்டத்தின் கீழ் பயிர்ச்செய்கையாளர்களும், ஏனைய பங்காளர்களும் மேற்கொள்கின்ற முதலீடுகளில் 50% உயர்ந்தபட்ச பயன்களை வழங்குவதற்கும், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவையினால் யினால் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• ஏற்றுமதி விவசாயப் பயிர்களுக்கான புதிய பயிர்ச்செய்கை அளவை அதிகரிக்கும் வேலைத்திட்டம்
• ஏற்றுமதி விவசாயப் பயிர்ச்செய்கைகளின் பயனுறுதன்மையை அதிகரிக்கும் வேலைத்திட்டம்
• இயற்கை முறையிலான ஏற்றுமதிப் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம்
• இயற்கை முறையிலான செய்கைக்கான சான்றுப்படுத்தல் மற்றும் ஆய்வுகூடப் பரிசோதனைகளுக்கான பணிகள்
• சர்வதேச நியாய சந்தை முறைமை (குயசை வுசயனந) சான்றிதழ் வழங்குதல்
• சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இயற்கை முறையிலான பயிர்ச்செய்கைக்கு ஏற்புடைய ஏனைய சான்றிதழ்களை வழங்கல்
• அறுவடைக்குப் பின்னரான தொழிநுட்ப வேலைத்திட்டத்திற்கான வசதிகளை வழங்கல்
• நாற்று மேடைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம்
• ஏற்றுமதி விவசாயப் பயிர்ச்செய்கை மாதிரிகளை பேணுதல்
• சுற்றுலாத்துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏற்றுமதிப் பயிர்ச்செய்கைக் கருத்திட்டங்கள்


