இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஏப்ரல் 4ஆம் திகதி முதல் திகதி வரை இலங்கையில் உத்தியோக சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளதாக அறிவித்தல் ஒன்றை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு விடுத்துள்ளது.
இச் சுற்றுப்பயணத்தில் இந்திய பிரதமர், ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ள. நாட்டில் தங்கி உக்ஷள்ள காலப்பகுதியில் இந்திய பிரதமர் ஸ்ரீ மகா போதியை தரிசிப்பதற்கு திட்டமிடப்பட்ள்ளதுடன், இந்திய அரசாங்கத்தின் உதவியினால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் சிலவற்றை திறந்து வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு இந்திய பிரதமருடன் அந்நாட்டின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளிநாட்டு அலுவல்கள் செயலாளர், மற்றும் இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் இச்சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.