மகாவலி மையத்தின் 2025-2027 இரண்டு ஆண்டு வேலைத் திட்டத்திற்கு இணங்க, இலங்கை மகாவலி அதிகாரசபை, இலங்கை அழகியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, 'மகாவலி குடியிருப்பாளர்களின் அழகியல் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் அவர்களுக்கு ஒரு தொழில்முறை அந்தஸ்தை உருவாக்குதல்' என்பதை நோக்கமாகக் கொண்ட இரண்டு நாள் பயிற்சித் திட்டம் ஒன்று அண்மையில்; (21) பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் இடம்பெற்றது.
இதற்காக, 10 மகாவலி வலயங்களையும் உள்ளடக்கிய நாட்டிய மற்றும் நாடகக் கலைகள், இசை, நடனம், இலக்கியம், காட்சி கலைகள், செய்திகள் மற்றும் அறிவிப்புகள், புகைப்படம் எடுத்தல்' ஆகிய பாடங்களில் ஆர்வமுள்ள 190 மகாவலி குடியிருப்பாளர்கள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களின் கீழ் பயிற்சி பெற்றனர்.


