2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
24.04.2025 - 25.04.2025 ஆகிய தினங்களில் நாடளாவிய ரீதியில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
அதே நேரம் தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்கான இறுதிச் சந்தர்ப்பமாக 28.04.2025, 29.04.2025 ஆகிய திகதிகளிலும் வாக்களிக்க முடியும்.
இதன் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றையதினம் சுமூகமான முறையில் தபால்மூல வாக்களிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 3807 பேர் தபால் மூலம் வாக்களித்கத் தகுதிபெற்றுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய் , மாந்தை கிழக்கு ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கான
தேர்தலாக இது அமைவதுடன் 41 வட்டாரங்களை உள்ளடக்கி காணப்படுகின்றது.
மாவட்டத்தில் மொத்தமாக 87800 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன் 137 வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.